வியாபாரியிடம் ரூ63,700 பறிமுதல்
கோவில்பட்டியில் வியாபாரியிடம் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்ற ரூ 63,700 ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
கோவில்பட்டி:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலில் பணம் மற்றும் அன்பளிப்பு கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் நேற்று மாலையில் விளாத்திகுளம் துணை தாசில்தார் அப்பனராஜ் தலைமையில், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிச்சை, ஏட்டு சாந்தி, போலீஸ்காரர் சுப்பையா ஆகியோர் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது மதுரையில் இருந்து கோவில்பட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த மதுரையை சேர்ந்த வியாபாரி பழனிகுமார் (வயது 52) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.63,700-ஐ பறிமுதல் செய்தார்கள்.
இந்த பணத்தை கோவில்பட்டி நகரசபை மேலாளர் பெருமாளிடம் ஒப்படைத்தார்கள். பழனிகுமாரிடம், தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்கள். பறிமுதல் செய்யப்பட்ட பணம் கோவில்பட்டி கிளை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story