பெண்ணை கொன்று உடலை சாக்கடையில் வீசிய 2 பேர் சிக்கினர்
பெண்ணை கொன்று உடலை சாக்கடையில் வீசிய 2 பேர் சிக்கினர்
திருப்பூர், எம்.புதுப்பாளையம் அருகே உள்ள நீலி காடு தோட்டம் அருகே தாராபுரம் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சாக்கடை கால்வாயில் நீல நிற சூட்கேசில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் பிணம் இருந்தது. மர்ம ஆசாமிகள் அந்த பெண்ணை கயிறால் இறுக்கி கொன்று உடலை சூட்கேசில் அடைத்து வீசி சென்றுள்ளனர். கொலை செய்யப்பட்ட யார் என தெரியவில்லை. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகிறார்கள். முதற்கட்டமாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது 6-ந் தேதி இரவு 10 மணிக்கு கோவில் வழி பஸ நிலையத்தை கடந்து இருசக்கர வாகனத்தில் சூட்கேசை இரு வாலிபர்கள் வாகனத்தில் வைத்துக் கொண்டு செல்வதும், பின்னர் சிறிது நேரம் கழித்து அதே வாகனத்தில் சூட்கேஸ் இல்லாமல் திரும்பி வந்ததும் தெரியவந்தது. அந்த வாகன என்னை வைத்து வெள்ளியங்காடு பகுதியில் இரு வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story