செல்வ முத்துக்குமார சாமி கோவில் கும்பாபிஷேகம்
செல்வ முத்துக்குமார சாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் என்.எச்.-2 பகுதியில் செல்வ முத்துக்குமார சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 2011-ம் ஆண்டுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதற்காக கோவிலில் புதிதாக ராஜகோபுரம் அமைக்கும் பணி மற்றும் செல்வ விநாயகர், வள்ளி தெய்வானை சமேத செல்வ முத்துக்குமார சாமி, சக்தி அய்யப்பன், பவானி அம்மன், வைத்தியநாத சாமி சமேத தையல்நாயகி அம்பாள், கோடையில் குளிர்தந்த ஈஸ்வரர், சிவகாமி அம்மாள், ஜெயவீர ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், பரிவார தெய்வங்கள், விமானங்கள் போன்றவற்றுக்கு திருப்பணிகள் நடந்து முடிந்தன. கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 4-ந்தேதி காலை முதல் கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை உள்பட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. முத்துக்குமார சாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன் பின்னர் கோவில் கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு அவர்்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத செல்வமுத்துக்குமார சாமி திருக்கல்யாண வைபவம், திருவீதி உலா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் மறைமலைநகர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செல்வமுத்துக்குமாரசாமி கோவில் நிர்வாகிகள், உறுப்பினர்கள், விழாக்குழுவினர், பக்தர்கள் இறைப்பணி குழுவினர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story