நடுவட்டம் அருகே திருமண வீட்டின் மீது கார் கவிழ்ந்தது


நடுவட்டம் அருகே திருமண வீட்டின் மீது கார் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 8 Feb 2022 8:57 PM IST (Updated: 8 Feb 2022 8:57 PM IST)
t-max-icont-min-icon

நடுவட்டம் அருகே திருமண வீட்டின் மீது கார் கவிழ்ந்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கூடலூர்

ஊட்டியில் இருந்து  கேரள பதிவு எண் கொண்ட ஒரு கார் கூடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. காரில் 7 பேர் இருந்தனர். அந்த கார் டி.ஆர்.பஜார் பகுதியில் வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. 

இதை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்தபடி ஓடினார்கள். பின்னர் அந்த கார் சத்தியசீலன் என்பவர் வீட்டின்  மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் வீட்டில் இருந்த சத்தியசீலனின் மகள் ஷாலினிக்கு (19) பலத்த காயம் ஏற்பட்டது. அதுபோன்று காரை ஓட்டி வந்த ஸ்ரீநாத் மற்றும் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சத்தியசீலனின் மகன் பிரின்சுக்கு புதன்கிழமைதிருமணம் நடக்கிறது. இதனால் அவருடைய வீடு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 

அந்த வீட்டின் மீது கார் மோதியதால் வீடு சேதம் அடைந்தது. இது குறித்து நடுவட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story