கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 8 Feb 2022 10:20 PM IST (Updated: 8 Feb 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தனியார் நிறுவன அதிகாரி 
தர்மபுரி மாவட்டம் குள்ளனூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). தனியார் நிறுவனத்தில் விற்பனை அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த 4-ந் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள தனது பெற்றோரை பார்க்க வந்த அவர் சப்பாணிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிர் இழந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டிரைவர் 
ஓசூர் தாலுகா மத்திகிரி டி.வி.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி தேஜா (19). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த ரவி தேஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூலித்தொழிலாளி 
சிங்காரப்பேட்டை அருகே உள்ள கெண்டிகானூரை சேர்ந்தவர் சிவலிங்கம் (56). கூலித்தொழிலாளி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த சிவலிங்கம் விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் 
மத்தூர் அருகே உள்ள கொடியூரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி மகேஷ் (32). மன நலம் பாதிக்கப்பட்டவர். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த மகேஷ் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பலத்த தீக்காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story