தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தர்மபுரி:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சி பகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் பிருந்தாதேவி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.
தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் உள்ள 230 வாக்குச்சாவடிகளில் பாலக்கோடு பேரூராட்சியில் 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அந்த 2 வாக்குசாவடிகள் நீங்கலாக 228 வாக்குச் சாவடிகளுக்கு ரிசர்வ் ஒதுக்கீட்டையும் சேர்த்து 275 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதன்படி தர்மபுரி நகராட்சிக்கு 69 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பேரூராட்சிகள்
மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் அரூருக்கு 36 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், பாலக்கோட்டிற்கு 22 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், பென்னாகரத்திற்கு 22 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், பி. மல்லாபுரத்திற்கு 18 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், கடத்தூருக்கு 18 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதேபோல் பேரூராட்சி வாரியாக கம்பைநல்லூர், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு தலா 18 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இது தொடர்பான விவரம் அங்கிருந்த அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது.
தொடர் கண்காணிப்பு
இதுதொடர்பாக கலெக்டர் திவ்யதர்சினி கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒதுக்கீடு பெறப்பட்ட பேரூராட்சிகளை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் தங்கள் அலுவலகத்திற்கு எடுத்து செல்லவும், அங்கு தொடர்ந்து கண்காணிக்க போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து 3-வது கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் 10-ந்தேதி (நாளை) தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் அல்லது பிரதிநிதிகள் முன்னிலையில் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களால் மேற்கொள்ளப்படும். பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்கு சீட்டு பொருத்தும் பணிகள் நடைபெறும் என்று கூறினார்.
அப்போது மகளிர் திட்ட இயக்குனர் பாபு, தர்மபுரி நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார், 10 பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story