போலீசார் கொடி அணிவகுப்பு


போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 8 Feb 2022 10:51 PM IST (Updated: 8 Feb 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.

சிவகாசி, 
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் அதற்கான பணிகளை செய்து வருகிறது. இந்தநிலையில் தேர்தலின்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும், மக்கள் அச்சம் இன்றி வாக்களிக்கவும் போலீஸ் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட போலீசாரின் கொடி அணிவகுப்பு முக்கிய வீதிகள் வழியாக திருத்தங்கல் சாலையில் உள்ள தேவர்சிலை அருகில் முடிந்தது. பின்னர் திருத்தங்கல் ரெயில்வே கேட் அருகில் இருந்து தொடங்கி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள போலீஸ் சோதனை சாவடி அருகில் முடிந்தது. இந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டனர்.

Next Story