மோட்டார் சைக்கிள் மோதி அரசு பஸ் கண்டக்டர் பலி


மோட்டார் சைக்கிள் மோதி அரசு பஸ் கண்டக்டர் பலி
x
தினத்தந்தி 8 Feb 2022 11:34 PM IST (Updated: 8 Feb 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

கீழையூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி அரசு பஸ் கண்டக்டர் பலியானார்.

வேளாங்கண்ணி:
கீழையூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி அரசு பஸ் கண்டக்டர் பலியானார்.
அரசு பஸ் கண்டக்டர்
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி அருகே காரை நகர் கிழக்கு கடற்கரைசாலை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பணி முடிந்து செந்தில்குமார் பஸ்சில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிள் மோதியது
 கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புதுப்பாலம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சாலையை கடக்க முயன்ற போது அந்தவழியாக வந்த மோட்டார் சைக்கிகள், செந்தில்குமார் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு  அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மகிழியை சேர்ந்த பூபாலன் மகன் மதியழகன் என்பவர் காயம் அடைந்து நாகை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story