அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
நீடாமங்கலம்:-
திருவாரூர் மாவட்ட பகுதிகளில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு அரவைக்காக நெல் அனுப்பப்படுவது வழக்கம். அதன்படி நீடாமங்கலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு மன்னார்குடி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் எடை கொண்ட சன்னரக நெல் 158 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் அடுக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நெல் அரவைக்காக விழுப்புரம் அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story