தமிழக அரசின் நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்
தமிழக அரசின் நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
திட்டச்சேரி:
தமிழக அரசின் நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
திட்டச்சேரி பேரூராட்சியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த தி.மு.க. ஆலோசனை கூட்டம் திட்டச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நலத்திட்டங்கள்
தமிழகத்தில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுபான்மை மக்களையும், சமூக அமைதியையும் பாதுகாத்து வருகிறார். மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி, அரசு பஸ்சில் பெண்கள் இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கூறி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க. என்ற கட்சியே இல்லாமல் போய் விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தி.மு.க. நகர செயலாளர் முகமது சுல்தான், தி.மு.க. அயலக அணி மாவட்ட அமைப்பாளர் சாதிக் ஜபார், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ரியாசுதீன், மனிதநேய மக்கள் கட்சி நகர பொறுப்பாளர் சுல்தான் ரித்தாவுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story