‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 8 Feb 2022 11:38 PM IST (Updated: 8 Feb 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் ெதாடர்பான பதிவுகள் வருமாறு:-

கண்காணிப்பு கேமரா வேண்டும்

மயிலாடுதுறை மாவட்டம் ஆறுபாதிவிளநகர் கிராமத்தில் நெடுஞ்சாலை அருகே கேபிள் ஒயர்களை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் துண்டித்து வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதை காவல்துறையினர் கண்காணித்து கேபிள் வயர்களை துண்டிக்கும் மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும். மேலும் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-பொதுமக்கள், ஆறுபாதிவிளநகர்.

Next Story