பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல் பார்வையாளர் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல் பார்வையாளர் தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சங்கர்லால் குமாவத் தலைமையில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பொது பார்வையாளர் அஜய் யாதவ் முன்னிலை வகித்து கூறியதாவது :-
முககவசம்
வாக்களிக்கும் நாளில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களுக்கு என தனித்தனி வரிசைகள் அமைக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கும், வரிசையில் வாக்காளர்கள் நிற்பதற்கும் குறியீடு அமைக்க வேண்டும். வாக்களிக்கும் நாளில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும், முகவர்களும் முககவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ளுங்கள். தெர்மல் ஸ்கேனர் செய்திடவும் வாக்குச்சாவடிக்குள் நுழையும் அனைவரும் முககவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா அறிகுறி
.இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துசாமி, உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு தேர்தல் பார்வையாளர் அஜய்யாதவ் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறையை பார்வையிட்டார்.
Related Tags :
Next Story