15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
தரங்கம்பாடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரமும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 3 பேர் விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறையாறு:
தரங்கம்பாடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரமும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 3 பேர் விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி பேரூராட்சி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 3, 4, 5 ஆகிய வார்டுகளில் போட்டியிட மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் நேற்று முன்தினம் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால் முறையே தி.மு.க. வேட்பாளர் நீலமேகம், அ.தி.மு.க. வேட்பாளர்கள் ரவி, ஆனந்தி ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் 3 வேட்பாளர்களுக்கும் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கான சான்றிதழ் வழங்கினார். அப்போது அவருடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மங்களேஸ்வரி, சவுந்திரவள்ளி, பழனிவேல், சுகாதார ஆய்வாளர் இளங்கோ மற்றும் பலர் உடனிருந்தனர்.
மற்ற 15 வார்டுகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 61 வேட்பாளர்கள் பேட்டியிடுகிறார்கள்.
அதன் விவரம் வருமாறு:-
வார்டு 1 முதல் 10 வரை
வார்டு-1:- உமா (தி.மு.க.), மாலதி (அ.தி.மு.க.), சுயேச்சை 1, (3 பேர் போட்டி),
வார்டு-2:-தினேஷ் (அ.தி.மு.க.), பாண்டியன் (நாம் தமிழர் கட்சி), பிரம்மநாதன் (தி.மு.க.) (3 பேர் போட்டி).
வார்டு-3:- நீலமேகம் (தி.மு.க.) போட்டியின்றி தேர்வு. வார்டு-4:- ரவி (அ.தி.மு.க.) போட்டியின்றி தேர்வு. வார்டு-5:-ஆனந்தி (அ.தி.மு.க.) போட்டியின்றி தேர்வு.
வார்டு-6:- ஜான்சிராணி (அ.தி.மு.க.), செந்தாமரைச்செல்வி (தி.மு.க.), சுயேச்சை 1. (3 பேர் போட்டி).
வார்டு-7:-
ஆதிலட்சுமி (தி.மு.க.), புவனேஸ்வரி (பா.ம.க.), உமாபதி (தே.மு.தி.க.), அனிட்டா (அ.தி.மு.க.), சுயேச்சை-1 (5 பேர் போட்டி).
வார்டு-8:- தையல்நாயகி (தி.மு.க.), சரஸ்வதி (நாம் தமிழர் கட்சி), சுதா (அ.தி.மு.க.), சுயேச்சை-1, (4 பேர் போட்டி).
வார்டு-9: ஜோன்ஸ் பிடரிக் செல்லப்பா (தி.மு.க.), மணிகண்டன் (நாம் தமிழர் கட்சி), பார்த்திபன் (அ.தி.மு.க.), கண்ணன் (பா.ஜனதா கட்சி), சுயேட்சை-1. (5 பேர் போட்டி).
வார்டு-10:- உமா (நாம் தமிழர் கட்சி), கோகிலா (அ.தி.மு.க.), கவிதா (தி.மு.க.) (3 பேர் போட்டி).
வார்டு 11 முதல் 18 வரை
வார்டு-11:- சுசீலா (அ.தி.மு.க.), மனோகரி (தி.மு.க.), கீதா (பா.ம.க.), சுயேட்சை-1 (4 பேர் போட்டி).
வார்டு-12:- கதிரேசன் (நாம் தமிழர் கட்சி), பொன்ராஜேந்திரன் (தி.மு.க.), ரெங்கநாதன் (அ.தி.மு.க.), சுயேச்சை-1 (4 பேர் போட்டி).
வார்டு-13:- கலைச்செல்வி (அ.தி.மு.க.), ஹேமலதா (நாம் தமிழர் கட்சி), சரஸ்வதி (தி.மு.க.) (3 பேர் போட்டி).
வார்டு-14:- சுகுணசங்கரி (தி.மு.க.), நாராயணசாமி (பா.ஜனதா கட்சி), விஜயகுமார் (அ.தி.மு.க.), கவிதா (நாம் தமிழர் கட்சி), (4 பேர் போட்டி).
வார்டு-15:- அருணாசலம் (அ.தி.மு.க.), சபரிசண்முகம் (நாம் தமிழர் கட்சி), பாலகிருஷ்ணன் (அ.ம.மு.க.), கழகம் ரமேஷ் (பா.ஜனதா), குமரவேல் (தி.மு.க.), சுயேச்சை-2. (7 பேர் ்போட்டி).
வார்டு-16:-மைமூன் பீவி (அ.தி.மு.க.), அனார்கலி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), ஜெய்னம்பு நாச்சியார் (எஸ்.டி.பி.ஐ.), சுயேச்சை-1. (4 பேர் போட்டி).
வார்டு-17:-வினோத் டேவிட்குமார் (நாம் தமிழர் கட்சி), சுரேஷ் சுந்தரமூர்த்தி (விடுதலை சிறுத்தைகள் கட்சி), ஜான்சன் அற்புதராஜ் (தே.மு.தி.க.), சதீஷ்குமார் (அ.தி.மு.க.), சுயேச்சை-2. (6 பேர் போட்டி).
வார்டு-18:- அலமேலு (தி.மு.க.), செல்வி (அ.தி.மு.க.), சுயேச்சை-1. (3 பேர் போட்டி). ஆகமொத்தம் 61 பேர் போட்டியிடுகிறார்கள்.
Related Tags :
Next Story