சிறுகாஞ்சி ஏரி மீண்டும் நிரம்பி கோடிபோகிறது.
சிறுகாஞ்சி ஏரி மீண்டும் நிரம்பி கோடிபோகிறது.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பெருங்காஞ்சி ஏரி கடந்த நான்கு மாதத்திற்கு முன் பெய்த தொடர் கனமழை காரணமாக பொன்னை ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் பொன்னை அணைக்கட்டு கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் சோளிங்கர் பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியது. இதில் பெருங்காஞ்சி ஏரியும் நிரம்பி கோடி போனது. பிறகு ஏரியில் தண்ணீர் சேமிக்கும் வகையில் கடை வாசலில் உள்ள மதகுகள் அடைக்கப்பட்டது.
கடந்த சில நாட்கள் வரை ஏரியின் தண்ணீர் ஒரு அடி வரை குறைந்திருந்த நிலையில் பொன்னை அணைக்கட்டு பகுதியில் உள்ள மதகுகளில் இரும்பு கதவுகள் அடைக்கப்பட்டதால் ஏரிப் பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டதாலும் தற்போது ஏரி மீண்டும் நிரம்பி கோடி போகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story