கலவை அருகே கிணற்றில் பிணமாக கிடந்த திருநங்கை


கலவை அருகே கிணற்றில் பிணமாக கிடந்த திருநங்கை
x
தினத்தந்தி 9 Feb 2022 12:20 AM IST (Updated: 9 Feb 2022 12:20 AM IST)
t-max-icont-min-icon

கலவை அருகே கிணற்றில் திருநங்கை ஒருவர் கிணற்றில் பிணமாக கிடந்தார்.

கலவை

கலவையை அடுத்த பாரிமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஒருவர் பிணமாக கிடப்பதாக வாழைப்பந்தல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாழைப்பந்தல் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விசாரணையில் பிணமாக கிடந்தவர் வேலூரைச் சேர்ந்த அன்புநாதன் என்ற ஜோதிகா (வயது 48) என்பது தெரியவந்தது. பாரிமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த இவர் கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story