வாணியம்பாடியில் சுவற்றில் துளையிட்டு 80 சிமெண்டு மூட்டைகள் திருட்டு


வாணியம்பாடியில்  சுவற்றில் துளையிட்டு 80 சிமெண்டு மூட்டைகள் திருட்டு
x
தினத்தந்தி 9 Feb 2022 12:20 AM IST (Updated: 9 Feb 2022 12:20 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் சுவற்றில் துளையிட்டு 80 சிமெண்டு மூட்டைகளை திருடிச்சென்று விட்டனர்.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ராமாயன்தோப்பு பிர்கேட் சிட்டி அருகே யாசின் என்பவர் புதியதாக வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் கட்டுமான பணிகள் முடிந்ததும் கேட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது புதிதாக கட்டுப்பட்டு வரும் வீட்டின் சுவற்றில் துளையிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது 80 சிமண்டு மூட்டைகள் மற்றும் கட்டுமான பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. 

இது குறித்து யாசின், வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story