சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
துறையூர்,பிப்.9-
துறையூர் அருகே பெருமாள்மலை அடிவாரத்தில் வசிப்பவர் சத்யா (வயது 32). இவருடைய முதல் கணவர் மாணிக்கம். இவருக்கு முதல் திருமணத்தில் பிறந்த லோகநாயகி மற்றும் தர்ஷினி (15) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 7ஆண்டுகளுக்கு முன்னர் மாணிக்கம் இறந்து விட்டார். இதையடுத்து செந்தில்குமார் என்பவரை சத்யா 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லக்சன் (6) என்ற மகன் உள்ளான். லோகநாயகிக்கு திருமணம் ஆகியிருந்த நிலையில் அவருக்கு அண்மையில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு புதிய ஆடை வாங்கித் தருவதற்கு தர்ஷினி தனது தாயாரிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணம் கேட்டதாகவும், அதற்கு வேலைக்கு போய் வந்து தருவதாக அவர் கூறியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் தர்ஷினியை பூக்கள் கட்டி அருகில் உள்ள பூக்கடையில் கொடுக்குமாறு கூறி விட்டு சத்யாவும், செந்தில்குமாரும் லக்சனை அழைத்துக் கொண்டு வேலைக்கு சென்று விட்டனராம். பூக்கடைக்காரர் சத்யாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தொடுத்த பூக்கள் ஏன் தரவில்லை என்று கேட்டுள்ளார். இதனையடுத்து பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி தர்ஷினியை தொடுத்த பூக்களை விரைவாக கொடுக்க சொல்லியுள்ளார். அவர் தர்ஷினியை வீட்டுக்கு வெளியில் இருந்து அழைத்த போது அவர் கதவைத் திறக்கவில்லை. இதனையடுத்து ஜன்னல் வழியாக பார்த்த போது தர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story