போலீசார் கொடி அணிவகுப்பு
போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தொடங்கி வைத்து, ஊர்வலத்தில் பங்கேற்றார். இந்த ஊர்வலம் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி பாலக்கரை ரவுண்டானா, வெங்கடேசபுரம், மதனகோபாலபுரம், சங்குப்பேட்டை, கடைவீதி, பழைய பஸ் நிலையம் வழியாகச்சென்று ஆத்தூர் சாலையில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு முடிவடைந்தது. இதேபோல் குரும்பலூர் பேரூராட்சியில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் குரும்பலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி பேரூராட்சி அலுவலகம் வரையில் நடந்தது. இதில் கூடுதல் சூப்பிரண்டு ஆரோக்கியபிரகாசம், பாண்டியன், துணை சூப்பிரண்டுகள் வளவன், தங்கவேல், சஞ்சீவ்குமார், சந்தியா மற்றும் சுப்பாராமன், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 180 பேர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story