கேரளாவுக்கு கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது
கருங்கல் அருகே 2 வெவ்வேறு சம்பவங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கருங்கல்,
கருங்கல் அருகே 2 வெவ்வேறு சம்பவங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
கருங்கல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செலின் குமார் மற்றும் போலீசார் கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்ட போது சிறு, சிறு மூடைகளில் 1,500 கிேலா ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் காருடன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்து காரில் வந்த மேக்காமண்டபம் தச்சன்விளை ஈத்தவிளைைய சேர்ந்த கிறிஸ்துதாஸ் மகன் ஆனந்த் (வயது24) என்பவரை கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்
இதுபோல், போலீசார் தேவிகோடு பகுதியில் சோதனை செய்த போது அந்த வழியாக காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த படந்தாலுமூடு வெட்டுவிளையை சேர்ந்த ஜெயக்குமார் (47) என்பவரை கைது செய்தனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story