தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் மாசி மக பெருவிழா கொடியேற்றம்


தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் மாசி மக பெருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 9 Feb 2022 2:28 AM IST (Updated: 9 Feb 2022 2:30 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

தென்காசி:
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசிமக பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

திருவிழாவானது வருகிற 18-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் மற்றும் மண்டகப்படி தீபாராதனை நடைபெறுகிறது. வருகிற 16-ந் தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. சுவாமி தேர், அம்மன் தேர் ஆகிய இரண்டு தேர்களும் நான்கு ரதவீதிகளில் சுற்றி மீண்டும் நிலையத்திற்கு வந்து சேரும். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர்கள் சங்கர், கோமதி, கோவில் நிர்வாக அதிகாரி சுசிலா ராணி, கோவில் ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.


Next Story