திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வைர வேல்
திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வைர வேல்
திருப்பரங்குன்றம்
மதுரையை சேர்ந்த முருக பக்தர்களான பாலகுமார், சபரிபாபு ஆகியோர் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவில் உற்சவருக்காக வெள்ளியில் வேல் செய்து அதில் தங்கமுலாம் பூசி நெற்றி பட்டையில் வைரக்கல் பதித்தனர். இந்த வைர வேல் திருப்பரங்குன்றம் கோவிலில் காணிக்கையாக நேற்று வழங்கப்பட்டது. இதனையடுத்து உற்சவரின் திருக்கரத்தில் வைரவேல் சாத்துப்படி செய்து விசேஷ பூஜை நடைபெற்றது. முன்னதாக மதுரையில் இருந்து ஏராளமானோர் பால்குடங்கள் சுமந்துவந்து உற்சவருக்கு மகா அபிஷேகம் செய்தனர். கோவிலில் உற்சவருக்கு வைரவேல் காணிக்கை செலுத்தியதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் 2-வது ஸ்தானிகர் ரமேஷ் பட்டர் சிறப்பு பூஜைகளை நடத்தினார். நிகழ்ச்சியில் துணை கமிஷனரின் நேர்முக உதவியாளர் மணிமாறன், உள்துறை பேஷ்கார் புகழேந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story