கர்நாடகத்தில் புதிதாக 4,452 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 4,452 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Feb 2022 3:07 AM IST (Updated: 9 Feb 2022 3:07 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 4,452 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

  கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குணம் அடைந்தவர்கள்

  கர்நாடகத்தில் நேற்று 88 ஆயிரத்து 797 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 4,452 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 லட்சத்து 6 ஆயிரத்து 761 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 51 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 447 ஆக உயர்ந்துள்ளது.

  ஒரே நாளில் 19 ஆயிரத்து 67 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து 94 ஆயிரத்து 866 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 72 ஆயிரத்து 414 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 5.01 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்பு விகிதம் 1.14 ஆக உள்ளது. புதிதாக கொரோனா பாதித்தோரில் பெங்களூரு நகரில் 2,139 பேர், பெலகாவியில் 352 பேர், தட்சிண கன்னடாவில் 146 பேர், தார்வாரில் 102 பேர், ஹாசனில் 103 பேர், மைசூருவில் 222 பேர், சிவமொக்காவில் 122 பேர், துமகூருவில் 221 பேர் உள்ளனர்.

51 பேர் உயிரிழந்தனர்

  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூரு நகரில் 17 பேரும், தட்சிண கன்னடாவில் 7 பேரும், மைசூரு, பல்லாரியில் தலா 3 பேரும், கோலார், துமகூருவில் தலா 4 பேரும் என மொத்தம் 51 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story