பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்
பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் இரட்டை இலை சின்னத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் போட்டியிடுகிறார்.
பனமரத்துப்பட்டி:
பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. சார்பில் 15 வார்டுகளிலும், அ.தி.மு.க. சார்பில் 14 வார்டுகளிலும், பா.ம.க., அ.ம.மு.க. 3 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. மேலும் 5-வது வார்டில் பா.ஜனதா வேட்பாளர் சின்னுராஜ் போட்டியிடுகிறார். இந்த வார்டில் அ.தி.மு.க.வினர் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் பா.ஜனதா- தி.மு.க. இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே 10-வது வார்டில் தே.மு.தி.க. நகர செயலாளர் ஈஸ்வரன் மனைவி அருணாராணி போட்டியிடுகிறார். இவர், அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த வார்டில் தி.மு.க.- தே.மு.தி.க .நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழக அளவில் பா.ஜனதா, தே.மு.தி.க.வுடன் கூட்டணி இல்லை என்றாலும் பனமரத்துபட்டியில் 2 வார்டுகளில் அ.தி.மு.க. அந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story