சேலம் மாவட்டத்தில் 251 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் 251 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 251 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 291 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று 251 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் 55 பேர், சேலம் ஒன்றியத்தில் 46 பேர், ஆத்தூர் பகுதிகளில் 25 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டத்துக்கு சென்னையில் இருந்து வந்த 31 பேர், ஈரோட்டில் இருந்து வந்த 20 பேர், நாமக்கல்லில் இருந்து வந்த 19 பேர், திருப்பூரில் இருந்து வந்த 18 பேர், கரூரில் இருந்து வந்த 16 பேர், திண்டுக்கல்லில் இருந்து வந்த 12 பேர், கோவையில் இருந்து வந்த 9 பேருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒருவர் பலி
ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,135 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 4 ஆயிரத்து 527 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தை சேர்ந்த 62 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார். இவர் உள்பட கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,750 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story