கன்றுக்குட்டியை கடித்துக் கொன்ற சிறுத்தை


கன்றுக்குட்டியை கடித்துக் கொன்ற சிறுத்தை
x
தினத்தந்தி 9 Feb 2022 3:51 AM IST (Updated: 9 Feb 2022 3:51 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே கன்றுக்குட்டியை சிறுத்தை ஒன்று கடித்துக் கொன்று உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கண்ணுப்புளி மெட்டு பகுதியில் குண்டாறு அணை உள்ளது. இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்குள்ள காட்டுப்பகுதியில் இருந்து சிறுத்தை அவ்வப்போது வெளியேறி ஊருக்குள் புகுந்து, ஆடு, நாய்களை கடித்துக் கொன்று தூக்கி சென்று வந்தது. 

தற்போது சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்து கன்றுக்குட்டியை கடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. அதாவது நேற்று அதிகாலை சாமி (வயது 45) என்பவர் குண்டாறு அணைக்கு செல்லும் வழியில் நரிபொத்தை என்ற இடத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு நேற்று அதிகாலை சென்றார். அப்போது அங்கு தொழுவத்தில்  6 மாத கன்றுக்குட்டி பலத்த காயத்துடன் செத்து கிடந்தது. அதன் உடலில் சிறுத்தையின் கால் நகங்கள் பதிந்து இருந்ததாகவும், எனவே அதை காட்டுப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை கொன்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து செங்கோட்டை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று, இறந்த கன்றுக்குட்டியை ஆய்வு செய்து வருகின்றனர்.






Next Story