தொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
தொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ந்தேதி, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி உடுமலை தளி சாலையில் உள்ள பாரதியார் நூற்றண்டு நினைவுஅரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிவளாகத்தில் நேற்று காலை அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப்பின்பற்றி கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ப.விஜயா தலைமை தாங்கினார். இடைநிலை ஆசிரியை லதா உறுதிமொழியை வாசிக்க, ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், பள்ளி மாணவிகள் மற்றும் பயிற்சி ஆசிரியைகள் ஆகியோர் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் தமிழாசிரியர்கள் வே.சின்னராசு, ஆர்.ராசேந்திரன், ஆசிரியைகள் நிர்மலா மேரி, கலாராணி, ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை சாவித்திரி, ஆசிரியர் கு.கண்ணபிரான் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். இதேபோன்று பல்வேறு பள்ளிகளில் இந்த உறுதி மொழிஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
Related Tags :
Next Story