வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
கோவில்பட்டியில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்
கோவில்பட்டி:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. வருகிற 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கோவில்பட்டி நகரசபை 36 வார்டுகளில் பதிவான வாக்குகள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட உள்ளன.
இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு, வருகை தந்து வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு, என்னென்ன வசதிகள் செய்ய வேண்டும் என்பது பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கலெக்டருடன் நகரசபை ஆணையாளரும், தேர்தல் அதிகாரியுமான ராஜாராம், உதவி கலெக்டர் சங்கர நாராயணன், தாசில்தார் அமுதா ஆகியோர் சென்றனர்.
Related Tags :
Next Story