ஸ்ரீவைகுண்டம் அருகே மாட்டுவண்டி பந்தயம்


ஸ்ரீவைகுண்டம் அருகே மாட்டுவண்டி பந்தயம்
x
தினத்தந்தி 9 Feb 2022 7:17 PM IST (Updated: 9 Feb 2022 7:17 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது

ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
பந்தயம்
ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரையில் ஆண்டுதோறும் மலைபார்வதி அம்மன் கோவில் கொடை விழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் மலைபார்வதி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
பெரிய மாட்டு வண்டிகள், சிறிய மாட்டு வண்டிகள், பூஞ்சிட்டு மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் என நான்கு பிரிவுகளாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 17 பெரிய மாட்டு வண்டிகள், 20 சிறிய மாட்டு வண்டிகள், 21 பூஞ்சிட்டு மாட்டு வண்டிகள், 10-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.
பரிசு
போட்டிகள் மணக்கரை கிராமத்தின் கீழ்புறத்தில் இருந்து வல்லநாடு பகுதி வரை தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் தொடங்கி வைத்தார். காளைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.
இறுதியில், பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மணக்கரை குணமாலை முதல் பரிசும், சிவலப்பேரி துர்க்காம்பிகை இரண்டாம் பரிசும், சின்ன மாட்டு வண்டியில் முதல் பரிசு ஆலந்தா அங்கப்பன், இரண்டாம் பரிசு கயத்தாறு கார்த்திக், வேளாங்குளம் கண்ணன், பூஞ்சிட்டு மாட்டுவண்டியில் முதலாம் பரிசு தேனி மாவட்டம் சுந்தரவல்லி, மணக்கரை நந்தகுமார், இரண்டாம் பரிசு தேனி மாவட்டம் முத்தையா, குதிரை வண்டியில் முதல்பரிசும் ஆவனப்பேரி, இரண்டாம் பரிசு வல்லநாடு, மூன்றாம் பரிசு பேட்டை ஆகியோர் பெற்றனர்.

Next Story