கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 9 Feb 2022 7:34 PM IST (Updated: 9 Feb 2022 7:34 PM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை கலெக்டர் முரளிதரன் தலைமையில் அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.

தேனி: 

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9-ந்தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். 

கலெக்டர் தலைமையில், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சக்திவேல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story