ராமநாதபுரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
ராமநாதபுரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலை யொட்டி மாநில தேர்தல் ஆணைய உத்தரவின்படி ராமநாத புரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப ்பட்டு வருகின்றன. இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் பாதுகாப்பு உணர்வுடன் தங்கள் வாக்குகளை செலுத்தும் வகையில் நேற்று போலீசாரின் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. ராமநாதபுரம் நகர் காவல்நிலைய பகுதியில் இருந்து தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு ரோமன்சர்ச், சாலைத்தெரு, அரண்மனை சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ராமநாதபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயசிங், லயோலா இக்னேசியஸ், வருவாய் கோட்டாட்சியர் சேக்மன்சூர், தாசில்தார் ரவிச் சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பில் ராமநாதபுரம் ஆயுதப்படை, அதிதீவிர அதிவிரைவு படை, அதிரடிப் படை, போக்குவரத்து போலீசார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story