‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 Feb 2022 10:40 PM IST (Updated: 9 Feb 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

இருக்கையின் நடுவே குப்பைத்தொட்டி
நெல்லை புதிய பஸ்நிலையத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு அறைக்கு எதிரே பயணிகள் அமரக்கூடிய இடத்தின் நடுவே குப்பைத்தொட்டியும், குப்பைத்தொட்டியை சுத்தப்படுத்தும் உபகரணங்களும் வைக்கப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் பயணிகள் மூக்கை பிடித்துக் கொண்டு அமர வேண்டி உள்ளது. எனவே, குப்பைத்தொட்டியை சற்று ஓரமாக வைப்பதற்கும், பயணிகளின் இருக்கையின் நடுவே வைக்காமலும் தடுக்க தூய்மை பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டுகிறேன்.
 -கி.ரேகா அரசன், வரதராஜபுரம், தூத்துக்குடி.

பொது சுகாதார வளாகம் கட்டப்படுமா?
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா பாம்புக்கோவில் சந்தை அருந்ததியர் தெருவில் பொது சுகாதார வளாகம் இல்லை. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே, பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
குமார், பாம்புக்கோவில் சந்தை.

வீணாகும் குடிநீர்
கடையம் யூனியன் திருமலையப்பபுரம் பஞ்சாயத்து புதுமனை தெரு நுழைவு வாயில் அருகே மெயின் ரோடு ஓரத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த பல நாட்களாக குடிநீர் வீணாக செல்கிறது. மேலும், அந்த பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். எனவே, குடிநீர் வீணாகுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.திருக்குமரன், கடையம்.

திறக்கப்படாத அங்கன்வாடி கட்டிடம்
ஆலங்குளம் 1-வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இதுவரை அந்த கட்டிடம் திறக்கப்படவில்லை. இதனால் ஆஸ்பெஸ்டாஸ் கூரையால் வேயப்பட்ட கட்டிடத்தில் குழந்தைகள் அமர்ந்து படிப்பதால் குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கும் நிலை உள்ளது. மேலும், இந்த மையத்திற்கு சில மாதங்களாக நிரந்தர அங்கன்வாடி பணியாளர் இல்லை. எனவே, புதிய கட்டிடத்தை திறப்பதற்கும், நிரந்தர பணியாளர் நியமிப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
எம்.ஞானசேவியர், தென்காசி.

தார்சாலை அமைக்கப்படுமா?
ஆலங்குளம் தாலுகா மாயமான்குறிச்சி கிராமத்தின் கீழ்புறம் விவசாய நிலங்களுக்கு செல்லும் சாலை, மண் சாலையாக உள்ளது. இதனால் மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மாறி விடுவதால் விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே, தார்சாலையாக மாற்றித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
செண்பகராஜ், குருவன்கோட்டை.

பொது சுகாதார வளாகம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பஸ்நிலையத்தில் பொது சுகாதார வளாகம் கட்டிக் கொடுக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
நா.சேர்மத்துரை, காயல்பட்டினம்.

சாலையின் நடுவே மின்கம்பம்
கோவில்பட்டி புதுகிராமத்தில் சிந்தாமணி நகர் 2-வது தெரு தொடக்கத்தில் மின்கம்பம் ஒன்று சாலையின் நடுவே அமைந்துள்ளது. இதனால் தெருவுக்குள் செல்ல முடியாமல் நான்கு சக்கர வாகனங்கள் சிரமப்படுகின்றன. அதேபோல் இருசக்கர வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே, மின்கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
ஆர்.அபி ராஜா, கழுகுமலை.

சேதம் அடைந்த பள்ளிக்கட்டிடம்
காயல்பட்டினம் நகராட்சி ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. மேற்கூரையில் காங்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் கட்டிடம் இடிந்து விழும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, ஆபத்து ஏற்படும் முன்பு கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இ.முருகராஜ், ஓடக்கரை.

குப்பைத்தொட்டி தேவை
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி தலங்களில், ஏரல் தாலுகா பெருங்குளம் மாயக்கூத்தர் பெருமாள் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் 100 மீட்டர் தொலைவில் சாலையின் இருபுறமும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. எனவே, குப்பைகளை அள்ளி அங்கு குப்பைத்தொட்டி வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ராதாகிருஷ்ணன், பெருங்குளம்.

Next Story