நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பர்கூர், காவேரிப்பட்டணம், நாகோஜனஅள்ளி, ஊத்தங்கரை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய 8 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக 424 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 8 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1,150 கட்டுப்பாட்டு கருவிகள், 2,631 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடந்தன.
ஒதுக்கீடு
கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானுரெட்டி, தேர்தல் பார்வையாளர் வந்தனா கார்க், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கடந்த 5-ந் தேதி முதல் கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 2-வது கட்டமாக இறுதி வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story