தை கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தை கிருத்திகையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி:
தை கிருத்திகையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தை கிருத்திகை
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் தை கிருத்திகையையொட்டி அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை, உபகார பூஜை நடந்தது. பின்னர் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் சாமிக்கு அதிகாலை பால், பன்னீர், சந்தனம், விபூதி, பழங்கள் உள்ளிட்ட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சாமிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் சாமி திருவீதி உலா நடைபெற்றது.
நெசவாளர் நகர்
தர்மபுரி நெசவாளர் நகர் வேல்முருகன் கோவிலில் தை கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில், எஸ்.வி. ரோடு சுப்பிரமணிய சாமி கோவில், கோட்டை இஷ்ட சித்தி சண்முகநாதர் கோவில், பாரதிபுரம் முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதேபோன்று லளிகம் தண்டாயுதபாணி கோவில், இண்டூர் சிவசுப்பிரமணிய சாமி கோவில், பாப்பாரப்பட்டி புதிய சிவசுப்பிரமணிய சாமி கோவில், கம்பைநல்லூர் சுப்பிரமணியசாமி கோவில், இருளப்பட்டி முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் தை கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
Related Tags :
Next Story