தர்மபுரி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
தர்மபுரி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தர்மபுரி:
தர்மபுரி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்டப்பணிகள்
தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் 2021- 2022-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அக்கமனஅள்ளி ஊராட்சி பனந்தோப்பில் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் பொது பண்ணை குட்டை அமைக்கும் பணி, கோடியூர் முதல் மூக்கனூர் மலையடிவாரம் வரை ரூ.20.20 லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. மேலும், நாய்க்கனஅள்ளி ஊராட்சி வெங்கட்டானூரில் ரூ.2 லட்சம் மதிப்பில் பொதுப்பண்ணை குட்டை அமைக்கும் பணிக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உத்தரவு
இதேபோல் சின்னமல்லிபட்டியில் ரூ.1.86 லட்சம் மதிப்பீட்டில் ஏரிக்கரை ஓரத்தில் மரக்கன்றுகள் நடும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். இந்தப் பணிகள் அனைத்தையும் விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது தர்மபுரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், தனபால், உதவி பொறியாளர்கள் துரைசாமி, சுமதி, ஒன்றிய பொறியாளர் மலர்விழி மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story