நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Feb 2022 11:18 PM IST (Updated: 9 Feb 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல்:
104 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 67 ஆயிரத்து 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 9 பேரின் பெயர் பிற மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 190 ஆக குறைந்தது. இதற்கிடையே நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 294 ஆக அதிகரித்து உள்ளது.
2,064 பேருக்கு சிகிச்சை
நேற்று 437 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 64 ஆயிரத்து 698 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 532 பேர் உயிரிழந்த நிலையில், 2 ஆயிரத்து 64 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும், பரவலை தடுக்கும் வகையில் வெளியில் செல்லும் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story