நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீசார் அணிவகுப்பு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீசார் அணிவகுப்பு
x
தினத்தந்தி 9 Feb 2022 11:19 PM IST (Updated: 9 Feb 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீசார் அணிவகுப்பு போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் தலைமையில் நடந்தது.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீசார் அணிவகுப்பு போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் தலைமையில் நடந்தது.
போலீசார் அணிவகுப்பு
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் போலீசார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று தேர்தல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போலீசார் சாலை அணிவகுப்பு நடந்தது. இந்த போலீசார் அணி வகுப்பு மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் தொடங்கியது. இந்த அணிவகுப்பை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.
125 பேர் பங்கேற்பு
அணி வகுப்பில் அதிரடிப்படை போலீசார், தமிழக சிறப்பு காவல் படை, சட்டம் ஒழுங்கு போலீசார் உள்பட 125 பேர் பங்கேற்று சாலையில் அணிவகுத்து சென்றனர். இந்த அணிவகுப்பு காந்திஜி சாலை, கச்சேரி சாலை வழியாக சின்னக்கடைவீதி வரை சென்றது.  மேலும் அணிவகுப்பில் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ்,  மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் 6 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.

Next Story