தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு
தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழு ேநாய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரான்மலை அரசு வட்டார மருத்துவ அலுவலர் நபீஷா பானு தலைமை தாங்கினார். நிறுவன மேலாளர் ராமநாதன், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி தொழு நோய் பரவல் குறித்தும், நோய் தொற்றாமல் தடுக்கும் முறைகள் குறித்தும், நோய் தொற்று ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் விரிவான விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டது. மாவட்ட நல கல்வியாளர் துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (தொழுநோய்) திருப்பதி ராஜா சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தினகரன், சுகாதார ஆய்வாளர் எழில் மாறன் டேமின் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story