அரக்கோணம் அருகே ஆற்றில் மூழ்கி பெண் பலி
அரக்கோணம் அருகே ஆற்றில் மூழ்கி பெண் பலியானார்.
அரக்கோணம்
அரக்கோணத்தை அடுத்த அரிகிலாபாடி பாளையக்கார கண்டிகையை சார்ந்தவர் தனசேகர் (வயது 36). டிராக்டர் டிரைவர். இவரது மனைவி நந்தினி (29). இவர்களுக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு மகள், 5 வயதில் ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை நந்தினி மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று அங்குள்ள கல்லாறு பகுதியில் உள்ள நீரில் மாடுகளை குளிப்பாட்டுவதற்காக ஆற்றில் இறங்கி உள்ளார்.
அப்போது கால் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் உடனே ஆற்றில் இறங்கி அவரை மீட்கும்பணியில் ஈடுபட்டனர். ஆனால் நந்தினி இறந்துவிட்டார். இதுபற்றி தகவலறிந்து அங்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலிம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story