கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மாசிமக தேர் திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது


கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மாசிமக தேர் திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 10 Feb 2022 1:11 AM IST (Updated: 10 Feb 2022 1:11 AM IST)
t-max-icont-min-icon

தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மாசிமக தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கரூர், 
கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில்
கரூர் தாந்தோன்றி மலையில் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான மாசிமக தேர் திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.
இதையடுத்து, கோவில் கொடிமரத்தில் பட்டாச்சாரியார்கள் கொடியை ஏற்றி விழாவினை தொடக்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
மாசிமக தேரோட்டம்
தேர் திருவிழாவையொட்டி வருகிற 12-ந் தேதி கல்யாண வெங்கடரமண சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 13-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 17-ந் தேதி மாசிமக தேரோட்டமும், 19-ந் தேதி தெப்ப தேரோட்டமும் நடக்கிறது.
20-ந் தேதி வெள்ளி கருட சேவை நடைபெறுகிறது. 26-ந் தேதி புஷ்ப வாகனத்துடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Next Story