ஆர்ப்பாட்டம்
தளவாய்புரத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தளவாய்புரம்,
தளவாய்புரம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 4-ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் அங்கு துரை பாண்டியன், காங்கிரஸ் சார்பில் மணிகண்டன், நாம் தமிழர் கட்சி சார்பில் அய்யனார், மக்கள் நீதி மய்யம் சார்பில் செங்குட்டுவன், சமூக ஆர்வலர் வேல்முருகன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story