7 கூரை வீடுகள் எரிந்து நாசம்


7 கூரை வீடுகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 10 Feb 2022 1:54 AM IST (Updated: 10 Feb 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு அருகே தீ விபத்தில் 7 கூரை வீடுகள் எரிந்து நாசமடைந்தன. இதில் ரூ.4 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.

திருவையாறு;
திருவையாறு அருகே தீ விபத்தில் 7 கூரை வீடுகள் எரிந்து நாசமடைந்தன. இதில் ரூ.4 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன. 
தீ விபத்து
தஞ்சை மாவட்டம் திருவையாறு உள்ள கீழதிருப்பந்துருத்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி சின்னாத்தாள்(வயது40). இவரது கூரை வீட்டில் மின் கசிவு காரணமாக   தீப்பிடித்தது. இந்த தீ அருகே இருந்த ராஜா, மொட்டையாண்டி, உமா மகேஸ்வரி,  சதீஷ்குமார், அசோக், முருகேசன் ஆகியோரின் கூரை வீடுகளுக்கும் பரவியது. இதில் வீடுகளில் இருந்த துணிகள், பாத்திரங்கள்,  பீரோ, கட்டில் ஆகியவை எரிந்து சேதமடைந்தது. இதன் மதிப்பு  ரூ.4 லட்சம் என கூறப்படுகிறது. 
ஆறுதல்
இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மேலும் தீ பரவாமல் போராடி அணைத்தனர். மேலும் திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சலம், ஒன்றிய கவுன்சிலர் ஜெயசீலன், ஊராட்சி தலைவர் காயத்ரிரமேஷ், வருவாய் ஆய்வாளர் மஞ்சு, ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினர். 
மேலும் நடுக்காவேரி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர. தீ விபத்து நடந்த போது வீட்டில் இருந்தவர்கள் வேலைக்கு சென்று விட்டதாலும் குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டதாலும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

Next Story