ஆமணக்கு குவிண்டால் ஆயிரம் விலை அதிகரிப்பு
ஆமணக்கு குவிண்டால் விலை ஆயிரம் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தாயில்பட்டி,
ஆமணக்கு குவிண்டால் விலை ஆயிரம் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆமணக்கு செடி
வெம்பக்கோட்டை ஒன்றியம் கோட்டைப்பட்டி, சிப்பிபாறை, ஏழாயிரம்பண்ணை, வெற்றிலையூரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் ஆமணக்கு செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. சென்றாண்டு குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரமாக இருந்தது. ஆனால் தற்போது ஆயிரம் விலை உயர்ந்து குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரமாக விலை போகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து கோட்டைப்பட்டி விவசாயி சுப்புராம் கூறியதாவது:-
கோட்டைப்பட்டி பகுதியில் நாட்டாமணக்கு, காட்டாமணக்கு ஆகியவை பயிரிடப்பட்டு உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
90 நாள் பயிரான ஆமணக்கு செடிகளுக்கு குறைவான தண்ணீர் மற்றும் குறைவான பராமரிப்பு இருந்தால் போதுமானது. இது நன்கு வளரக்கூடியது.
தற்போது ஆமணக்கு செடியின் இடையே ஊடு பயிராக கொத்தமல்லி, நிலக்கடலை, சின்ன வெங்காயம் ஆகியவை பயிரிட்டுள்ளோம். ஆமணக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு டன் வரை கிடைக்கிறது. மேலும் கிலோ ரூ.40 முதல் ரூ.43 ரூபாய் விலை கிடைக்கிறது. விளக்கு எண்ணெய் தயாரிக்க ஆமணக்கு விதைகளை பயன்படுத்துவதால் மார்க்கெட்டில் இதற்கு அதிக மவுசு உள்ளது. சங்கரன்கோவில், கோவில்பட்டி, விருதுநகரில் இருந்து விவசாயிகள் இதனை வாங்கி செல்கின்றனர்.
தற்போது விலையும் அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story