ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வருடாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஆண்டாள், ெரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 2-வது நாள் யாகசாலை பூஜை நடைபெற்றது. இந்த பூஜை முடிந்தவுடன் ஆண்டாள், ெரங்கமன்னருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதற்காக ஆண்டாள் நீராடிய திருமுக்குளத்தில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதையடுத்து புனிதநீரால் அபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி இன்று (வியாழக்கிழமை) லட்சார்ச்சனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.
.
Related Tags :
Next Story