கட்டிடத்தை பள்ளிக்கு ஒப்படைக்க கோரி உண்ணாவிரதம்
கட்டிடத்தை பள்ளிக்கு ஒப்படைக்க கோரி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்பட்டது
தாமரைக்குளம்
அரியலூர் அருகே உள்ள தாமரைக்குளத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த அ.தி.மு.க.ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை பள்ளிக்கே ஒப்படைக்கக்கோரி முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராமமக்கள் ஒன்று கூடி தேசியக்கொடியுடன் அமர்ந்து உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராமத்தில் ஏராளமான இடங்கள் இருக்கும் நிலையில் பள்ளியில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட வேண்டிய அவசியம் என்ன? என்று அப்போது அவர்கள் குரல் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் ராஜமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது சம்பந்தமாக வருகிற 24-ந் தேதி ஆர்.டி.ஓ. தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி தீர்வு காணலாம் என்று கூறினார். அதற்கு, பேச்சுவார்த்தையில் தீர்வு காணும் வரை கட்டிடத்தில் எவ்வித பணியும் மேற்கொள்ளக் அனுமதிக்க கூடாது எனக் உண்ணாவிரதம் இருந்தவர்கள் கேட்டுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story