அகழி கோட்டை சுவரில் செடிகள் அகற்றும் பணி தீவிரம்
தஞ்சை பெரிய கோவிலை சுற்றி உள்ள அகழி கோட்டை சுவரில் செடிகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்;
தஞ்சை பெரிய கோவிலை சுற்றி உள்ள அகழி கோட்டை சுவரில் செடிகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த பெரிய கோவிலை சுற்றிலும் அகழி காணப்படுகிறது. இந்த அகழியை சுற்றிலும் கோட்டை சுவர் உள்ளது. இந்தக் கோட்டை சுவரில் செடிகள் மரங்கள் மற்றும் புதர்கள் முளைத்து காணப்படுகிறது. செடிகள் மற்றும் மரங்கள் வளரும் போது கோட்டைச் சுவருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
செடிகள் அகற்றம்
இவ்வாறு கோட்டை சுவரில் காணப்படும் செடி கொடிகள் அவ்வப்போது அகற்றப்பட்டு வந்தாலும் தொடர்ந்து முளைத்த வண்ணம் உள்ளது. பெரிய கோவில் முன்புறம் உள்ள கோட்டை சுவரில் புதர்கள், செடிகள் மற்றும் கொடிகள் முளைத்து காணப்படுவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் காணப்பட்டது. இதையடுத்து இந்த செடி கொடிகளை அகற்ற வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று பெரிய கோவில் முன்புறம் உள்ள கோட்டை சுவரில் உள்ள செடி கொடிகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவில் இருபுறம் உள்ள கோட்டைச் சுவர்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளில் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கோவிலை சுற்றிலும் உள்ள கோட்டைச் சுவரில் காணப்படும் செடி கொடிகள் அகற்றப் படடுகிறது.
Related Tags :
Next Story