மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் திருட்டு


மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 10 Feb 2022 2:58 AM IST (Updated: 10 Feb 2022 2:58 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை மர்மநபர் திருடி சென்று விட்டார்.

சுரண்டை:
சுரண்டை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் முருகராஜ் மகன் ஜெய் கணேஷ் (வயது 38). இவரும், இவரது சகோதரர் ஜெகனும் ஒலிப்பெருக்கி நிலையம் நடத்தி வருகின்றனர். நேற்று மதியம் ஜெய் கணேஷ் காமராஜர் நகரில் உள்ள அரசு வங்கியில் நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். ‌‌அதை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து விட்டு, பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது யாரோ மர்மநபர், மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்த புகாரின் பேரில் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மர்ம நபரை தேடி வருகிறார்.






Next Story