வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி


வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 10 Feb 2022 4:00 PM IST (Updated: 10 Feb 2022 4:00 PM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

ல்லடம் பகுதிகளில்  3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கறிக்கோழி நுகர்வை பொறுத்து அதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். இந்த நிலையில் கோழி தீவனங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து பல்லடம் கறிக்கோழி பண்ணையாளர்கள் கூறியதாவது
 கறிக்கோழி வளர்ப்புக்கு முக்கிய தீவனங்களாக மக்காச்சோளம், சோயா புண்ணாக்கு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கோழி தீவனங்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதால் விலை அதிகரிக்கிறது. எனவே தீவன ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும். கோழி தீவனங்களுக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான மக்காசோளம், கம்பு மற்றும் சோயா ஆகியவற்றை வெளி மாநிலங்களை நம்பியே கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. எனவே அவைகளை தமிழகத்தில் உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரயில்கள் மூலம் கொண்டு வரும் கோழி தீவனப் பொருட்களுக்கு மத்திய அரசு ரெயில் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும்.
  கறிக்கோழிளுக்கு நோய் தாக்காமலும், போதிய வளர்ச்சி அடைவதற்காக அவற்றுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி, மற்றும் மருந்துகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், அதிக விலை கொடுத்து அவற்றை வாங்கிப் பயன்படுத்த வேண்டியநிலை உள்ளது.  எனவே மருந்து, மற்றும் தீவனங்களை தமிழகத்திலேயே தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
---

Next Story