லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 10 Feb 2022 4:13 PM IST (Updated: 10 Feb 2022 4:13 PM IST)
t-max-icont-min-icon

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

 காங்கேயம் அமராவதி நகர் பகுதியை சேர்ந்தவர் பூபதி வயது 39.  காங்கேயம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக  வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிள் மூலம் காங்கேயம் நோக்கி வந்து கொண்டிருந்தார். காடையூர் பகுதி அருகே வந்த போது, சாலையில் எவ்வித முகப்பு விளக்குகள் எரியாமலும், இண்டிகேட்டரும் போடாமல் நிறுத்தி இருந்த லாரியின் பின்பக்கத்தில் எதிர்பாராத விதமாக பூபதி ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் காங்கேயம் போலீசார்  சம்பவ இடத்திற்கு வந்து பூபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story