விற்பனையாகாத சின்ன வெங்காய நாற்றுகள்
விற்பனையாகாத சின்ன வெங்காய நாற்றுகள்
ெங்காய நாற்றுக்கள் விற்பனையாகாமல் உள்ளனர்.
சின்ன வெங்காயம் சாகுபடி
குண்டடம், தாராபுரம், காங்கேயம், உடுமலை, ஒட்டன்சத்திரம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். காய் நடவு, நாற்று நடவு என 2முறைகளில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் நாற்று நடவு முறையில் பயிர் செய்தால் அதிகளவில் நோய்த்தாக்குதல் இருக்காது என்பதால் விவசாயிகள் நாற்று நடவு முறையையே அதிகம் விரும்புகின்றனர். சின்ன வெங்காய விதை உற்பத்தியில் குண்டடம் பகுதி விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருவதால் உற்பத்தி செய்த விதையை விதைச்சான்று பெற்றும், பெறாமலும் விற்பனை செய்வதுடன் நாற்றங்கால் தயார் செய்து அதிகளவில் நாற்று விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
குண்டடம் பகுதியில் மேட்டுக்கடை, எரகாம்பட்டி, மானூர்பாளையம், தும்பலப்பட்டி, நந்தவனம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஏக்கர் கணக்கில் நாற்றங்கால் தயார் செய்து நாற்று விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நாற்று வாங்குவதற்காக தாராபுரம், உடுமலை, காங்கேயம், தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து விவசாயிகள் வருகின்றனர்.
நாற்று விற்பனை
ஒரு ஏக்கர் அளவுக்கு நடவு செய்ய ரூ.10ஆயிரத்துக்கு பயிர் விற்பனை செய்து வந்தனர். வெங்காயப் பயிருக்கு தேவை அதிகமிருக்கும் நேரங்களில் தங்களது இஷ்டத்திற்கு விலையை உயர்த்தி ஒரு ஏக்கருக்கான பயிர் ரூ.50ஆயிரம் வரை விற்பனை செய்தனர். கடந்த ஆண்டு வெங்காய விதை, நாற்று ஆகியவற்றுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஒரு கிலோ விதை ரூ.20ஆயிரம் வரையும், ஒரு எக்கருக்கான பயிர் ரூ.50ஆயிரம் வரையும் விற்பனை செய்தனர்.
இதில் போலி வெங்காய விதை, தரமில்லாத நாற்று ஆகியவற்றால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதும் நடந்தது. இந்த நிலையில் நடப்பாண்டு வெங்காய விதை மற்றும் நாற்று அதிகளவில் குண்டடம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் வெங்காய விதை மற்றும் நாற்று ஆகியவை கேட்பாரற்று கிடப்பதால் வந்த விலைக்கு நாற்றுக்களை விற்பனை செய்து வருகின்றனர். ஒரு ஏக்கர் நடவு செய்ய தற்போது ரூ.3ஆயிரத்துக்கு நாற்று கிடைக்கிறது. அத்துடன் ஏக்கர் கணக்கில் விற்பனைக்காக நாற்று தயார் செய்தவர்கள் அப்படியே உழவு ஓட்டி அழித்தும் வருகின்றனர். கடந்த சில நாட்களாக குண்டடம் பகுதி விவசாயிகள் வாட்சாப் குரூப்பில் வெங்காய நாற்று இலவசம் என விளம்பரம் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story