தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா
தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா
மடத்துக்குளம் தாலுகாவில் 11 ஊராட்சிகள் 4 பேரூராட்சிகள் உள் ளன. இங்கு 1 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். கடந்த 2009ம் ஆண்டு மடத்துக்குளம் தனி தாலுகாவாக உருவாக்கப்பட்டது. இதற்கு பின்பு போக்குவரத்தும் அரசு சார்ந்த நடவடிக்கைகளும் அதிகரித்த நிலையில், இதற்கு தேவையான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
2015ம் ஆண்டு அரசு மருத்துவமனை 2016 ம் ஆண்டு சார்நிலை கருவூலம் இதற்கு பின்பு தாலுகா அலுவலகத்திற்கு தனிகட்டிடம், கோ ர்ட்டு மற்றும் பலவகையான துறைகளும் உருவாக்கப்பட்டன. ஆனால் மிக முக்கியமான தேவையான தீயணைப்பு நிலையம் இங்கு இல்லை. உடுமலையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்து தான் தீயை அணைக்கும் நிலை உள்ளது.
மடத்துக்குளத்தில் உள்ள கிராமங்களுக்கும், உடுமலைக்கும் சராசரி யாக 20 கி.மீ தொலைவு இடைவெளி உள்ளது. தீ விபத்து குறித்து தீய ணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்து அவர்கள் உடனடியாக புறப்பட்டாலும் வரும் வழியில் உடுமலை பஸ்நிலைய பகுதியிலுள்ள நெருக்கடி, சிக்னல்கள் மற்றும் பரபரப்பு, அதிகமான போக்குவரத்து இவற்றை கடந்து தீ எரியும் இடத்திற்கு வர சராசரியாக 30 நிமிடம் ஆகிறது. இந்த நிமிடங்களில் தீயின் பாதிப்பு அதிகரித்து விடுகிறது. இந்த முக்கிய நிமிடங்கள் போக்குவரத்தில் வீணாகிறது. இதற்கு தீர்வாக மடத்துக்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் தீயணைப்பு நிலை யம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story